search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில் சேவை பாதிப்பு"

    பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட சிக்னல் கோளாறால் ஆலந்தூர் செல்லும் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர். #MetroTrain
    ஆலந்தூர்:

    சென்டிரலில் இருந்தும், தேனாம்பேட்டை டி.எம்.எஸ். ரெயில் நிலையத்தில் இருந்தும் மெட்ரோ ரெயில் விமான நிலையம் வரை சென்று வருகிறது.

    இந்த நிலையில், இன்று காலை 7 மணி அளவில் பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து ஆலந்தூரில் இருந்து பரங்கிமலை வரை செல்லும் மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தப்பட்டது.

    இதனால் டி.எம்.எஸ்-ல் இருந்து விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரெயில் ஆலந்தூரிலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து தொழில்நுட்ப நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

    அவர்கள் சிக்னல் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்துக்கு பிறகு சிக்னல் கோளாறு சரி செய்யப்பட்டு மெட்ரோ ரெயில் வழக்கம் போல் ஓடியது. சிக்னல் கோளாறால் காலை 7 மணி முதல் 9 மணி வரை பரங்கிமலை-ஆலந்தூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர். #MetroTrain
    கேரளாவில் வரலாறு காணாத மழை, வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டதால் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து கேரளா மாநிலத்திற்கு 3-வது நாளாக ரெயில் சேவை முடங்கியுள்ளது. #KeralaRain #KeralaFloods
    சென்னை:

    கேரளாவில் வரலாறு காணாத மழை, வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டதால் ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    பாலக்காடு, திருவனந்தபுரம் டிவிசன்களில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு ரெயில் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து கேரளா மாநிலத்திற்கு 3-வது நாளாக ரெயில் சேவை முடங்கியுள்ளது.



    விசாகப்பட்டினம் செல்லும் எக்ஸ்பிரஸ் (எண் 18567) கோவை-கொல்லம் இடையே ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று கொல்லம்-விசாகப்பட்டினம் இடையே மட்டும் இயக்கப்படுகிறது. பாலக்காடு-எர்ணாகுளம்- பாலக்காடு பயணிகள் ரெயில் இன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    மங்களூர்-கோவை பயணிகள் ரெயில் கோழிக்கோடு மற்றும் கோவை இடையே மட்டும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. சண்டிகர்-கொச்சுவேலி கேரல் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ஒரு பகுதி மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ஷோரனூர்-நிலம்பூர் இடையே பயணிகள் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    சென்னை எழும்பூரில் இருந்து மங்களூர் செல்லக் கூடிய (எண்.16859) எக்ஸ்பிரஸ் நேற்றிரவு ரத்து செய்யப்பட்டது. பனாஸ்வாடி-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் நேற்று ஈரோட்டில் நிறுத்தப்பட்டது. புதுச்சேரி-மங்களூர் எக்ஸ்பிரஸ் சேலத்துடன் சேவை நிறுத்தப்பட்டது. சேலம்- மங்களூர் இடையே சேவை ரத்து செய்யப்பட் டுள்ளது. அந்த ரெயில் இன்று சேலம்-புதுச்சேரி இடையே மட்டும் இயக்கப்படுகிறது.

    காரைக்கால்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் பாலக்காட்டில் நிறுத்தப்பட்டது. பாலக்காடு-எர்ணாகுளம் இடையே சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல ஐதராபாத்- திருவனந்தபுரம் சபரி எக்ஸ்பிரஸ், சேலம்- திருவனந்தபுரம் இடையே ஒரு பகுதி மட்டும் ரத்து செய்யப்பட்டது. இந்த ரெயில் இன்று சேலத்தில் இருந்து ஐதராபாத் புறப்பட்டு செல்லும். கே.எஸ்.ஆர். பெங்களூரு-கன்னியாகுமரி ஐலேண்ட எக்ஸ்பிரஸ் பாலக்காடு-கன்னியாகுமரி இடையே மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இந்த ரெயில் இன்று பாலக்காடு-கே.எஸ்.ஆர் பெங்களூரு இடையே இயக் கப்படுகிறது. கன்னியாகுமரி- பாலக்காடு இடையே மட்டும் ரத்து செய்யப்பட்டது.

    கோவை- கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கேரளா மாநிலத்திற்கு செல்லக்கூடிய ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. #KeralaRain #KeralaFloods

    ×